நிக்கி ஹேலி (கோப்புப் படம்) 
உலகம்

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

இஸ்ரேல் பயணத்திற்கு தயாராகும் நிக்கி ஹேலி

DIN

குடியரசுக் கட்சி தலைவர்களில் ஒருவரும் அமெரிக்க அதிபர் போட்டிக்கான முன்னாள் வேட்பாளருமான நிக்கி ஹேலி அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் உடன் ஐநாவுக்கான இஸ்ரேல் தூதராக பணியாற்றிய, இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் டேனி டனோன் உடன் பயணிக்கவுள்ளார். நிக்கி ஹேலி ஐநாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு இஸ்ரேல் பகுதிகளான கிபுட்ஸ் பெரி மற்றும் கபார் அசா ஆகிய இடங்களை அவர் பார்வையிடவுள்ளார். காஸாவின் எல்லைப் பகுதியான இவற்றில் ஹமாஸ் அத்துமீறி நுழைந்து வன்முறை செயலில் ஈடுபட்டனர்.

யூத எதிர்ப்புக்கு எதிரானவரான நிக்கி ஹேலி, ஐக்கிய நாடுகள் இஸ்ரேலை கையாளும் விதத்தில் யூத எதிர்ப்பு பார்வையை கொண்டுள்ளதாக எழுதியுள்ளார்.

முன்னதாக டிரம்ப் அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ராபர்ட் ஓ’பிரைன், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக இருந்த ஜான் ரகோல்டா, சுவிட்சர்லாந்தின் முன்னாள் அமெரிக்க தூதர் எட் மெக்முல்லென் ஆகியோர் இஸ்ரேலுக்கு கடந்த சில நாள்களில் சென்று வந்துள்ளனர்.

டிரம்பின் நெருக்கமான ஆலோசகர்கள் தொடங்கி தற்போது நிக்கி ஹேலி வரை இஸ்ரேல் செல்வது, டொனால்டு டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி இஸ்ரேலுக்கு வேண்டிய ஆதரவை அளிக்கும் என்பதை வெளிப்படுத்தத்தான் என்று கூறப்படுகிறது.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நிக்கி ஹேலி, உள்கட்சிக்குள் நடந்த அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

SCROLL FOR NEXT