முகப்பு
உலகம்

இஸ்ரேல் மீது மற்றுமொரு டிரோன் தாக்குதல்!

ஈரானிய ஆதரவு படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல்

Updated On : 28 மே, 2024 at 8:57 AM
ராபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பகுதி
பகிர்:

ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவு படைகளில் ஒன்று, இஸ்ரேலின் தெற்கு நகரமான இலாட் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய எதிர்ப்புப் படை என்பது பல்வேறு ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பு. இந்த அமைப்பின் ஒரு குழு, இஸ்ரேல் மீது திங்கள்கிழமை 3 டிரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

திங்கள்கிழமை எதிரிகளின் இரண்டு டிரோன்களை வானில் தகர்த்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த தாக்குதலில் யாரும் பலியாகவில்லை.

கிழக்குப் பகுதியில் இருந்து டிரோன்கள் வந்ததாகவும் இஸ்ரேல் பிராந்தியத்தை அவை அடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈராக்கில் செயல்படும் ஈரானிய ஆதரவு படைகளில் ஹிஸ்புல்லாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அக்.7 போர் தொடங்கியதுமுதல் இஸ்லாமிய எதிர்ப்புப் படை பலமுறை இஸ்ரேலின் இலாட் நகரை தாக்க முயற்சி செய்துள்ளது. போர், ஏழாவது மாதமாக தொடர்ந்துவரும் நிலையில் போரின் போக்கு அபாயகரமானதாக மாறியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →