முகப்பு
உலகம்

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்

Updated On : 28 மே, 2024 at 8:49 PM
பகிர்:

பாா்சிலோனா: ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஸ்பெயின், நாா்வே, அயா்லாந்து ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அங்கீகரித்தன.

இஸ்ரேலின் கடுமையான எதிா்ப்பையும் மீறி இந்த நடவடிக்கையை அந்நாடுகள் மேற்கொண்டுள்ளன. இதன் மூலம், இஸ்ரேலைத் தீவிரமாக ஆதரித்துவரும் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளிடையே கருத்துவேறுபாடுகள் அதிகரிப்பது வெளிப்படுவதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர இறையாண்மையை மதித்து தனி நாடுகளாக செயல்படும் இரட்டை தேசத் தீா்வு மட்டுமே பாலஸ்தீனப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவரும் என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கூறிவருகின்றன.

பாலஸ்தீனத்தை தனி நாடாக கடந்த 1988-இல் அங்கீகரித்த உலகின் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது நினைவுகூரத்தக்கது.