காற்றில் எளிதாக தொற்றக்கூடிய பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமியிலிருந்து நாடு முழுவதுமாக விடுபட்டதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழல், உணவு மற்றும் ஊர்ப்புற விவகார துறை அமைச்சகத்தின் அறிவிப்பை உலக விலங்குகள் சுகாதார அமைப்பு சரிபார்த்து பதிப்பித்துள்ளது.
மார்ச் 31-ம் தேதி வடக்கு அயர்லாந்து இதே போலான அறிவிப்பை வெளியிட்டது.
அக்.2021 முதல் 360-க்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட பறவைக் காய்ச்சல் தொற்றை பிரிட்டன் சந்தித்தது.
பறவைகளிடமிருந்து பரவும் நோய்க்கிருமிகளால் உருவாகும் இந்த தொற்றால் தற்போதைக்கு யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் பிப்.14,2024 கடைசியாக ஒருவர் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவிக்கிறது.
ஹெச்பிஏஐ ஹெச்5 வகை கிருமிகள் பிரிட்டனில் குறைவாக உள்ளது. ஹெச்பிஏஐ ஹெச்5என்1 பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள பண்ணை பறவைகள் மற்றும் பிடிக்கப்பட்ட பறவைகளில் குறைவாகக் காணப்படுகிறது.
தற்போது பறவைகளில் சுற்றும் கிருமிகள் எளிதாக மனிதர்களை தாக்காது என ஆதாரங்கள் மூலம் காண முடிவதாக பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே இவற்றின் மூலம் சந்தைக்கு வருகிற உணவுப் பொருள்களிலும் தாக்கம் மிகக் குறைவாக உள்ளது. முறையாக சமைக்கப்பட்ட முட்டைகள் உள்பட பண்ணை பொருள்களை எடுத்துக்கொள்வதில் எந்த தீங்குமில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.