அமெரிக்கா: மனைவியுடன் சென்று வாக்கு செலுத்திய டிரம்ப்.!
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று(நவ. 5) மாலை தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று(நவ. 5) மாலை தொடங்கியுள்ளது. அமெரிக்க நேரப்படி(அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில்), செவ்வாய்க்கிழமை(நவ. 5) அதிகாலை 5 மணி, அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு, வெர்மோண்ட் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. அங்கு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சாா்பிலும், முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சாா்பிலும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
இந்த நிலையில், முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் ஃபுளோரிடாவின் பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் சென்று இன்று(நவ. 5) இரவு 10.45 மணியளவில் (இந்திய நேரப்படி) வாக்கு செலுத்தினார்.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்று ஒருவேளை நான் தோல்வியடைந்தால், அப்போது முதல் ஆளாக தோல்வியை ஏற்றுக்கொள்வேன்” என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.