Alex Brandon
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலமாக 2-வது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நவ. 5 செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 277 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 224 தொகுதிகளில் வென்றுள்ளார்.

வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 51%, கமலா 47.5% பெற்றுள்ளனர்.

பெரும்பான்மைக்குத் தேவையான 270 தொகுதிகளைப் பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கா முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வெஸ்ட் பாம் பீச்சில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக, தனது மனைவிக்கு உணர்ச்சிப்பொங்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மக்கள் தன்னை நம்பித்தான் வாக்களித்துள்ளதாகவும் அவர்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது என்றும் இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க | ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க பிரதிநிதிகள் சபை தலைவர் மைக் ஜான்சன், அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் டிரம்ப், இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார்.

முன்னதாக 2016ல் டிரம்ப்பும் 2020ல் குடியரசுக் கட்சியின் ஜோ பைடனும் அதிபராக பதவியேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புல்லட் பேபி.. கீர்த்தி ஷெட்டி!

பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

எஸ்டிஆர் - 49 புரோமோ எப்போது?

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம்!

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

SCROLL FOR NEXT