எலான் மஸ்க்குடன் டொனால்ட் டிரம்ப் 
உலகம்

டிரம்ப் வெற்றியால் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு பலமடங்கு உயர்வு!

டிரம்ப் வெற்றியால் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பின் வெற்றியின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்துமதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், இந்தத் தேர்தலில் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய பிரசாரத்திற்கு சுமார் 119 பில்லியன் டாலர்களை நன்கொடை அளித்திருந்தார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அவரது நிகர மதிப்பு 26.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 290 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரது நிறுவனங்களின் பங்குகள் கூடியுள்ளன.

டெஸ்லாவின் ஒரு பங்கு 14.75% (37.09 டாலர்கள்) அதிகரித்து 288.53 டாலரை எட்டியுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி அன்று 242.84 டாலராக இருந்த பங்குகள், நவம்பர் 6 ஆம் தேதி 288.53 டாலராக உயர்ந்துள்ளது.

டிரம்பின் வெற்றியால் எலான் மஸ்க் மட்டுமின்றி உலகின் இரண்டாவது பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 7.14 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 228 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் வெற்றிபெற்ற பிறகு அமெரிக்க பங்குச் சந்தை பொதுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் விவரம் தாக்கல் செய்ய தனியார் பள்ளிகளுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ஃபாக்ஸ்கான் நிறுவன முதலீடு உறுதியானது

SCROLL FOR NEXT