AP
உலகம்

நேட்டோவுக்கு புதிய தலைவர்: பொதுச்செயலராக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் பதவியேற்பு!

நேட்டோ பொதுச்செயலராக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட் பதவியேற்பு!

DIN

நேட்டோ பொதுச்செயலராக நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் மார்க் ரூட் இன்று (அக். 1) பதவியேற்கவுள்ளார்.

நெதர்லாந்து பிரதமராக 13 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த மார்க் ரூட், ரஷியா - உக்ரைன் இடையேயான போர் நீடித்துவரும் சவாலான காலகட்டத்தில் நேட்டோ தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, நெதர்லாந்தில் கடந்த ஆண்டு மார்க் ரூட் தலைமையிலான கூட்டணி அரசு, பெரும்பான்மையை இழந்த நிலையில், நெதர்லாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாகவும், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் கடந்த ஆண்டு ஜூலையில் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபரில், நேட்டோ பொதுச்செயலராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பதவிவகித்து வந்த ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, நேட்டோ பொதுச்செயலராகும் தனது விருப்பத்தை மார்க் ரூட் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட ஐரோப்பிய தலைவர்கள் பெரும்பாலானோரின் ஆதரவு பெற்றவராக விளங்கிய மார்க் ரூட் நேட்டோ பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேட்டோ பொதுச்செயலராக பதவியேற்பதையொட்டி செய்தியாளர்களுடன் பேசிய மார்க் ரூட், நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் இணைந்து பணியாற்ற தயார் எனக் கூறியுள்ளார் நேட்டோவின் புதிய பொதுச்செயலர் மார்க் ரூட். அவர் கூறியதாவது, “டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். டொனால்டு டிரம்ப்புடன் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றை கரையான் அரிப்பதுபோல அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்! - சேகர்பாபு

செங்கோட்டையன் ஆறு மாதங்களாக கட்சிக்கு எதிராக இருந்தார்! எடப்பாடி பழனிசாமி

செங்கோட்டையனை நீக்கியது உள்கட்சி பிரச்னை: நயினார் நாகேந்திரன் பேட்டி

புதிய '108 ஆம்புலன்ஸ்' சேவைகளை தொடக்கிவைத்தார் முதல்வர்!

சதய விழா: ராஜராஜ சோழன் சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

SCROLL FOR NEXT