உலகம்

ரஷியாவுக்கு 10 ஆயிரம் வீரர்களை அனுப்பும் வட கொரியா!

ரஷியாவுக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப வட கொடியா முடிவு செய்துள்ளது.

DIN

ரஷியாவுக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப வட கொடியா முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே 3 ஆயிரம் வீரர்களை அனுப்பியுள்ள நிலையில், கூடுதலாக வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக வட கொரியா உளவு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற சேவைக்குழுவின் ரகசிய கூட்டத்தின்போது தேசிய புலனாய்வு சேவை நிறுவனம் இதனைத் தெரிவித்ததாக தென்கொரிய செய்தி நிறுவனமாக யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

ரஷியா - உக்ரைன் இடையிலான போரியில் ரஷியாவுக்கு ஆதரவாகப் போரிட, முதல் கட்டமாக 1500 வீரர்கள் கொண்ட குழுவை வட கொரியா அனுப்பி வைத்ததை கடந்த வாரம் தேசிய புலனாய்வு சேவை நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.

முதல் கட்ட குழு ரஷியாவுக்குச் சென்றதும், அக்டோபர் 8 - 13 வரையிலான தேதிகளில் கூடுதலாக 1, 500 வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

இதையும் படிக்க | இலங்கையில் உள்ள இஸ்ரேல் மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!

ரஷியாவுக்கு அனுப்பப்பட்ட வீரர்களுக்கு ராணுவ வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் வீரர்களில் 3 ஆயிரம் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் எஞ்சிய வீரர்கள் அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படை துருப்புகளை அனுப்ப வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் பரஸ்பரம் உறுதிமொழியில் கையெழுத்திட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வீரர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT