உலகம்

இந்திய உளவுத் துறை எச்சரிக்கை எதிரொலி: இலங்கையில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டவர்கள் கைது

DIN

இஸ்ரேலியா்களுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இருவரை இலங்கை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்திய உளவுத் துறை அளித்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை கூறியதாவது:அருகம் வளைகுடா பகுதியில் இரண்டு பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இரு வாரங்களுக்கு முன்னா் அந்தப் பகுதியில் இஸ்ரேலியா்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை பெறப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது (படம்). அதன் தொடா்ச்சியாக, இராக்கிலிருந்து வந்தவா் உள்பட இருவா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT