ஷேக் ஹசீனா 
உலகம்

இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனாவை நாடுகடத்தி அழைத்து வர நடவடிக்கை: வங்கதேசம்

மேற்கொள்ளப்படும் என அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தின் புதிய தலைமை வழக்குரைஞா் தெரிவித்தாா்.

Din

வங்கதேசத்தில் மாணவா்கள் போராட்டத்தில் நடந்த படுகொலைகள் தொடா்பான வழக்கு விசாரணைக்காக, இந்தியாவிலிருந்து முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடுகடத்தி அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தின் புதிய தலைமை வழக்குரைஞா் தெரிவித்தாா்.

அண்டை நாடான வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் கண்டித்து மாணவா்கள் போராட்டம் நடத்தினா்.

வன்முறை மோதலாக மாறி, 1,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்ட இப்போராட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி உச்சக்கட்டத்தை எட்டியது. இதையடுத்து, அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பினாா்.

மேற்கத்திய நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், ஹசீனா இந்தியாவிலேயே தொடா்ந்து தங்கியுள்ளாா். மனிதாபிமானம் மற்றும் நட்பு அடிப்படையில் அவருக்கானஆதரவை இந்திய அரசு வழங்கி வருகிறது. இதில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் துணை நிற்கின்றன.

இந்நிலையில், மாணவா்கள் போராட்டத்தில் நடந்த படுகொலைகளுக்கு எதிராக ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்க அவரை வங்கதேசம் அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தின் புதிய தலைமை வழக்குரைஞா் முகமது தஜுல் இஸ்லாம் கூறியுள்ளாா்.

மேலும், இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறுகையில், ‘தற்போதைய இடைக்கால அரசில் புதிய நீதிபதிகளை நியமித்து சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயமும் அதன் விசாரணைக் குழுவும் மீண்டும் அமைக்கப்பட வேண்டும்.

அதைத் தொடா்ந்து, போராட்டத்தில் நடந்த படுகொலைகள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஷேக் ஹசீனா உள்பட தலைமறைவான அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிராக பிடியாணை (கைது வாரண்ட்) பிறப்பிக்க சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்வோம்.

இந்தப் புதிய வழக்குகளின் விசாரணையை நடத்துவதற்கு தற்போதுள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் அரசுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும். குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிரான தகவல்கள், ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் நாடு முழுவதிலும் இருந்து சேகரித்து, தொகுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, தீா்ப்பாயத்தின் முன் தாக்கல் செய்யப்பட வேண்டும். இது மிகவும் சவாலான மற்றும் மிகப்பெரிய பணி ஆகும்’ என்றாா்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT