வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் போலந்தின் நைசா பகுதி படம் | ஏபி
உலகம்

கனமழையால் மத்திய ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிப்பு! உயிரிழப்பு 15-ஆக உயர்வு

ரோமானியா, ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசில் பலி எண்ணிக்கை உயர்வு!

DIN

ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வீசிய போரிஸ் புயலால் கனமழை பெய்து வருகிறது. போரிஸ் புயலால் செக் குடியரசில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

செக் குடியரசில் கடந்த 1997-ஆம் ஆண்டு, பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பின், அந்நாடு வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பை இப்போது சந்தித்துள்ளது இர்னோ, செஸ்கி ஆகிய நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.செக் குடியரசில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்கள் குடிநீர், மின்சரம் போன்ற அடிப்படை வ்சதிஅக்லின்றி அவதியுற்றுள்ளனர்.

போலந்து, ஆஸ்திரியா, ரோமானியா, ஜெர்மனி, சுலோவேகியா, ஹங்கேரி ஆகிய நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல ஆறுகளில் அபாய அளவைக் கடந்து வெள்ளம் பாய்வதால் ஊருக்குல் நீர் புகுந்ததில் பல பகுதிகள் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், போலந்தில் மழை வெள்ள பாதிப்புகளை தேசியப் பேரிடராக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

செக் குடியரசை புரட்டிப்போட்ட வெள்ளம்

கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ரோமானியாவில் 6 பேரும், ஆஸ்திரியாவில் 3 பேரும், போலந்தில் 5 பேரும், செக் குடியரசில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, செக் குடியரசில் 4 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஐரோப்பாவில் கனமழை பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. மழை வெள்ளத்தில் பலர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT