படம் | பிடிஐ
உலகம்

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு! ஈரான் தலைவர் கருத்துக்கு இந்தியா கண்டனம்

ஈரானைச் சேர்ந்த மத குரு மற்றும் மூத்த தலைவர் ஆயடொல்லா அலி காமேனேய் தெஹ்ரான் கருத்து

DIN

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று ஈரானைச் சேர்ந்த மத குரு மற்றும் மூத்த தலைவர் ஆயடொல்லா அலி காமேனேய் தெஹ்ரான் நகரில் திங்கள்கிழமை(செப்.16) பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தான் பேசிய கருத்துகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘இஸ்லாமிய மதத்தின் எதிரிகள் நம்மை எப்போதும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர். இந்தியா, மியான்மர், காஸா அல்லது ஏதாவதொரு பகுதியில், ஒரு முஸ்லிம் பாதிப்புகளை எதிர்கொள்வதைக் குறித்து நாம் கண்டுகொள்ளாதிருந்தால், நம்மை நாம் முஸ்லிம்கள் என கருதிக்கொள்ள முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில், ஈரான் தலைவர் கூறிய கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது, “ஈரானின் மூத்த தலைவர், இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இதை ஏற்றுக்கொள்ள முடியாது, இந்த கருத்துகள் தவறான தகவல்களைக் கொண்டவை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சிறுபான்மையினர் குறித்து கருத்து தெரிவிக்கும் நாடுகள், பிற நாடுகளைக் குறித்து பேசும்முன், தங்கள் நாட்டின் நிலைமையைக் குறித்து கவலைகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

SCROLL FOR NEXT