24 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை
பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கையை காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
உலகம்24 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை
பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கையை காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் 100-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் காஸா மருத்துவமனைகளுக்கு தாக்குதலில் பலியான 132 பேரில் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தது.
காஸா பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் 33 பேர் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பலியாகினர்.
மேலும் 252 காயமுற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என அமைச்சகத்தால் பிரித்து சொல்லப்படவில்லை.
இதையும் படிக்க: இஸ்ரேலிய கால்பந்தாட்ட வீரரை வெளியேற்றிய துருக்கி: காரணம் என்ன?
போரில் ஏறத்தாழ 8 ஆயிரம் ஹமாஸ் போராளிகள் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 24,100 ஆக உயர்ந்துள்ளது. 60,834 பேர் காயமுற்றுள்ளனர்.