உடல்களுடன் உறவினர்கள்... AP
உலகம்

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 27 பேர் பலி!

காஸா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பற்றி...

DIN

காஸா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கும் மேலாக காஸாவுக்குச் செல்லும் உணவு, எரிபொருள், உதவிகள் ஆகியவற்றை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில், காஸா நகரத்தின் புறநகர்ப் பகுதியான துஃபாவில் இயங்கிவரும் பள்ளியின் மீது வியாழக்கிழமை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், 27 பேர் கொல்லப்பட்டதாகவும், முதல்கட்டமாக 14 குழந்தைகள், 5 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, புதன்கிழமை நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி!

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

SCROLL FOR NEXT