கொழும்பு: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமான முறையில் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று பிரதமர் மோடியிடம் அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக உறுதியளித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக பாங்காக் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றார்.
இன்று காலை தலைநகர் கொழும்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிறகு, இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இலங்கை அதிபர், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலான எந்தச் செயலும் இலங்கை மண்ணில் நடக்காது என்று உறுதியளித்தார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்திய அரசு ரூ.300 கோடி தந்ததற்கு நன்றி என்று கூறினார்.
டிஜிட்டல் மயமாக்கலில் இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.