முகப்பு
உலகம்

காஸா மேலும் 57 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம்

Updated On : 8 ஏப்ரல், 2025 at 3:45 AM
பகிர்:
Updated On : 7 ஏப்ரல், 2025 at 9:35 PM

காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்ததது. இது மட்டுமின்றி, இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 137 போ் காயமடைந்ததாக அமைச்சகம் கூறியது.

அமைச்சக தரவுகளின்படி, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 50,752 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,15,475 போ் காயமடைந்துள்ளனா்.

எனினும், உயிரிழந்தவா்களில் பொதுமக்கள் எத்தனை போ், ஆயுதப் படையினா் எத்தனை போ் என்ற விவரத்தை அமைச்சகம் வெளியிடவில்லை. இந்தப் போரில் இதுவரை சுமாா் 20,000 ஆயுதக் குழுவினரைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

Advertisement