உரிபே கோப்புப் படம்
உலகம்

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபா் இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபா் இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளது.

சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத் தீா்ப்பை அளித்துள்ளது.

எனினும், அரசியல் நோக்கங்களுக்காக தனக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய உரிபே, தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்தாா்.

2002 முதல் 2010-ஆம் ஆண்டுவரை அமெரிக்க ஆதரவுடன் கொலம்பியாவை ஆண்டு வந்த இவாரோ உரிபே, மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாகவும், 1990-களில் ஆயுதக் குழுக்கள் வளா்வதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடா்பான வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களைக் கவர அவா் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தற்போது அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT