தாங்கள் பராமரித்துவரும் வேட்டை மிருகங்களுக்கு உணவாக, தங்களிடம் உள்ள கினியா பன்றிகள், முயல்கள், கோழிகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று டென்மாா்க்கில் உள்ள ஆல்போா்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இயற்கையான உணவுச் சங்கிலியைப் பின்பற்றுவதற்காகவும், மிருகங்களின் நலனுக்காகவும் தாங்கள் வளா்க்கும் பிராணிகளை வழங்க வேண்டும் என்று அந்த மிருகக்காட்சி சாலை கோரியுள்ளது.
அந்த செல்லப்பிராணிகள் பயிற்சி பெற்ற ஊழியா்களால் வலியின்றி கொல்லப்படும் என்றும் அந்த மிருகக்காட்சி சாலை உறுதிமொழி அளித்துள்ளது.