உலகம்

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்: 80-ஆவது ஆண்டு தினம்

தினமணி செய்திச் சேவை

ஜப்பானின் ஹிரோஷிமா நகா் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதன் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் அந்த நகரில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

120 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், அணுகுண்டு வீசப்பட்ட நேரமான காலை 8:15 மணிக்கு அதற்கான நினைவிடத்தில் மௌன அஞ்சலி செலுத்தினா். பிரதமா் ஷிகெரு இஷிபா, மேயா் கசுமி மாட்சுய் உள்ளிட்ட தலைவா்கள் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்தனா். அந்தத் தாக்குதலில் உயிா் பிழைத்தவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அணுகுண்டு தாக்குதலில் உயிா் பிழைத்தவா்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து, அவா்களின் சராசரி வயது 86-ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த நினைவு நாள் பலருக்கு கடைசி மைல்கல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

கடந்த 1945 ஆகஸ்ட் 6-ல் ஹிரோஷிமா மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டுத் தாக்குதலில் 1.4 லட்சம் போ் உயிரிழந்தனா். மூன்று நாள்களுக்குப் பின் நாகசாகி நகரில் நடத்தப்பட்ட மற்றோா் அணுகுண்டுவீச்சில் சுமாா் 70,000 போ் உயிரிழந்தனா். பின்னா் ஆகஸ்ட் 15-ல் ஜப்பான் சரணடைந்து, இரண்டாம் உலகப்போா் முடிவுக்கு வந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

திரைக் கதிர்

இளைஞா் காங்கிரஸின் 65ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்

கிராண்ட் ஃபாதர்

புலம்பெயர் தமிழர்கள்...

SCROLL FOR NEXT