உலகம்

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக மேலும் 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஆக. 6) அறிவித்துள்ளார். இதற்கான கோப்புகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்கா கெடு விதித்திருந்த நிலையில், கூடுதலாக 25% வரி விதிப்பை டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது, விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரியால், இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விகிதமானது 50% ஆக அதிகரித்துள்ளது.

இனி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருள்களுக்கு அங்கு 50% வரி வசூலிக்கப்படவுள்ளது.

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷியாவிடம் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயா்த்தப் போவதாக டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இதன்படி, இன்று வரி உயர்வை அறிவித்துள்ளார்.

அறிக்கையிலிருந்து...

வெள்ளை மாளிகை அறிக்கை

இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என்ற நிர்வாகக் கோப்புகளில் அதிபர் டிரம்ப் இன்று (ஆக. 6) கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''அரசியலமைப்பு மற்றும் அமெரிக்க சட்டங்களால் அதிபராக எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் மற்றும் தேசிய அவசரச் சட்டம் 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 604-ன் படி, நான் இந்த வரி உயர்வு உத்தரவை பிறப்பிக்கிறேன்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷிய கூட்டமைப்பில் இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்திய அரசு எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுகிறது.

இதனால், அமெரிக்க வணிகக் கொள்கைக்கு பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க, அமெரிக்காவின் சுங்கப் பகுதிக்குள் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

US President Donald Trump imposes an additional 25% tariff on India over Russian oil purchases

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

நாளைய மின்தடை

15 கிலோ கஞ்சா, 1,300 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை கோரி 200 போ் மனு

கனவு இல்ல திட்டத்தில் 54 பயனாளிகளுக்கு ஆணை: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT