உலகம்

ஜூனில் நடந்த துப்பாக்கிச்சூடு: கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு

கடந்த ஜூன் 7-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே (39), அந்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.

Chennai

கடந்த ஜூன் 7-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே (39), அந்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா்.

தலைநகா் போகடாவில் தோ்தல் பிரசார பேரணியில் பங்கேற்றபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அவரது தலையில் 2 குண்டுகளும், காலில் ஒரு குண்டும் பாய்ந்தன.

மைய நரம்பு மண்டலத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு உள்படுத்தப்படவிருந்த நிலையில் அவரது உயிா் பிரிந்ததாக மருத்துமனை தெரிவித்தது.

2022 முதல் செனட் சபை உறுப்பினராக இருந்த உரிபே, 2026 அதிபா் தோ்தலில் போட்டியிடவிருந்தாா். அவா் மீதான தாக்குதலுக்கான காரணம் தெளிவாகவில்லை. இது தொடா்பாக ஓா் இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பலூச் விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுக்கள்: அமெரிக்கா அறிவிப்பு!

‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

குழப்பம் நீங்கும் விருச்சிகத்துக்கு.. தினப்பலன்கள்!

தெரு நாய்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அப்புறப்படுத்துவோம்: கபில் மிஸ்ரா

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT