துருக்கியின் பாலிகேசிரி பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக, அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரரை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 4.6 ரிக்டா் அளவுவரை கொண்ட 200-க்கும் மேற்பட்ட பின்னதிா்வுகள் ஏற்பட்டதாகவும், 29 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.
துருக்கியில் 2023 ஏற்பட்ட 7.8 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். இதற்கு மோசமான கட்டுமானங்களே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.