உலகம்

மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!

வாஷிங்டனின் மோசமான குற்றவாளி யார்? டிரம்ப்தான்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் மோசமான குற்றவாளி குறித்து எக்ஸ் தளத்தின் பதில் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுயுள்ளது.

அமெரிக்காவின் டிசி வாஷிங்டனில் எக்ஸ் தளத்தின் பயனர் ஒருவர், எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவிடம் (AI) `வாஷிங்டனில் மோசமான குற்றவாளி யார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

30 ஆண்டுகால தரவுகளைச் சரிபார்த்த எக்ஸ் தளம், வாஷிங்டனில் மிகவும் மோசமான குற்றவாளியை, தண்டனை மற்றும் மோசமான பெயர்களின் அடிப்படையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரைக் கூறியது.

ஜனவரி 2025 வரையில், அவர்தான் நியூயார்க்கில் 34 குற்றங்களில் குற்றவாளி என்று கூறப்படுவதாகத் தெரிவித்தது.

அமெரிக்காவில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதாக டிரம்ப் சமீபத்தில் கவலை தெரிவித்த நிலையில், அவரையே மோசமான குற்றவாளி என்று எக்ஸ் தளம் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

அதுமட்டுமின்றி, டிரம்ப்புக்கும் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குக்கும் ஜூன் மாதத்தில் மோதல் ஏற்பட்டு, பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடம்புரண்ட திரைக்கதை!

கரூர் பலி 41-ஆக உயர்வு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை!

தைரியம் கூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

மாவட்ட மைய நூலகத்தில் சிறுவா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

SCROLL FOR NEXT