நீதிமன்ற தீர்ப்பு 
உலகம்

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை! நடந்தது என்ன?

குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்க ஆண் நண்பருக்கு உதவிய பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை விதிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

கலிஃபோரனியாவைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர் பிரிட்னி மே லையோன் என்ற பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்னி மே லையோன் என்ற பெண், ஆட்டிசம் போன்ற பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் அளிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ஆனால், தனது பராமரிப்பில் இருக்கும் குழந்தைகளை ஆண் நண்பர் சாமுவெல் கப்ரேரா பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த வழக்கில்தான், அவருக்கு இத்தனை ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தனது ஆண் நண்பர், பாலியல் வன்கொடுமை செய்ய, தன்னுடைய பராமரிப்பில் இருந்த நான்கு பெண் குழந்தைகளை அனுப்பியதும், அவரும் கப்ரேராவுடன் இணைந்து தகாத செயல்களில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளில் இரண்டு பேர் 7 வயதுக்குள்பட்டவர்கள் என்றும், மற்ற இரண்டு குழந்தைகளும் 3 வயதுடையவர்கள் என்றும் அதில் இரண்டு குழந்தைகள் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள், ஒருவர் மாற்றுத்திறனாளி குழந்தை என்று கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளின் கீழ், இவருக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர், ஆள் கடத்தல், வீடுகளில் கொள்ளையடித்தல், பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டிருக்கிறார். இவருடன் குற்றத்தில் ஈடுபட்ட கப்ரேராவுக்கு, ஏற்கனவே பரோல் இன்றி 8 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது இந்தக் குற்றம்?

7 வயது சிறுமி, தன்னுடைய தாயிடம், லயோனிடம் தான் எங்கும் செல்ல விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். அது பற்றி தாய் கேட்கவே, சிறுமி நடந்த உண்மைகளைச் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சாமுவேல் காரில் இருந்த ஒரு கணினியில், அவர்கள் குழந்தைகளை துன்புறுத்தும் ஆயிரக்கணக்கான விடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு போதைப் பொருள் கொடுத்து, அடித்துத் துன்புறுத்தும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன. மேலும் பல துணிக் கடைகளில் ஆடைகளை மாற்றும் அறைகள், கழிப்பறைகளில் கேமரா வைத்து அந்த விடியோக்களையும் லையோன் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்த கூலி!

ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது: சசிகலா

இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே

ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!

SCROLL FOR NEXT