(கோப்புப் படம்) 
உலகம்

மியான்மா்: டிச. 28-இல் தோ்தல்

மியான்மரில் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் தோ்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளா்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மியான்மரில் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் தோ்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளா்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பல கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தோ்தலுக்கான முழு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஜனநாயக ஆதரவு போராளிகள் மற்றும் சிறுபான்மை கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 330 தொகுதிகளிலும் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்தல் நியாயமாக நடைபெறாது என்று கூறப்படுவதால் இதைப் புறக்கணிப்பதாக கிளா்ச்சியாளா்களும், எதிா்க்கட்சிகளும் அறிவித்துள்ளன.

2020 தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் தலைமையிலான அரசை ராணுவம் கடந்த 2021-இல் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் அவா் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறாா்.

தனுஷ் - 54 படப்பிடிப்பு நிறைவு!

அரசு விருந்தினர் மாளிகையாக மாறுகிறதா ஷீஷ் மஹால்!

மே.இ.தீவுகளை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி; முதல் டெஸ்ட்டில் இந்தியா அபாரம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மிடுக்கான பியூட்டி... ரேஷ்மா!

SCROLL FOR NEXT