கனடாவில் விமான ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கனடாவின் பெரும் விமான நிறுவனமான ‘ஏர் கனடா’ விமான நிறுவன ஊழியர்கள் கடந்த சில நாள்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால், விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான நிலைய ஊழியர்கள் என சுமார் 10,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, ஏர் கனடா நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கனடாவில் விமான ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இது குறித்து, ஏர் கனடா விமான நிறுவன ஊழியர்களின் சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) பேசுகையில், தங்கள் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்தனர்.
சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட முரண்களைக் களைய வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் விமான நிறுவனத்துடன் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏர் கனடா விமான சேவை முழுமையாக சீராக இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.