அமெரிக்க அதிபர் டிரம்ப் கோப்புப்படம்
உலகம்

ஆக. 25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை நிறுத்தம்! - இந்தியா அறிவிப்பு

அமெரிக்க வரி விதிப்புக்கு எதிராக அந்த நாட்டிற்கான அஞ்சல் சேவை நிறுத்தம் செய்யப்படுவது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக அந்த நாட்டிற்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன் போரில் ரஷியாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா 50% என்ற கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு ரஷியா, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனுடனான போர் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை வரவழைக்கவே இந்தியா மீது வரி விதித்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக இன்று(ஆக. 23) அறிவித்துள்ளது.

"கடந்த ஜூலை 30 ஆம் தேதி அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட கடுமையான வரி விதிப்பைத் தொடர்ந்து அதற்கு எதிராக வருகிற ஆக. 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

800 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பொருள்களுக்கு இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இனி அது ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருள்களும் அவற்றின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் சர்வதேச அவசர பொருளாதார ஆற்றல் சட்டத்தின் (IEEPA)படி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். எனினும் 100 அமெரிக்க டாலர் வரையுள்ள பரிசுப்பொருள்களுக்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்படும். இதர பொருள்களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்சல் அனுப்ப வேண்டும்.

எனவே, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருள்களின் முன்பதிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது" என்று தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

India Temporarily Suspends Postal Services To US After Trump's Tariffs Over Russian Oil Purchase

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவர்கள் எப்போதைக்குமான ரோல் மாடல்!

நாட்டின் சட்டக்கல்வி வலுப்பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளியதாக மத்திய அமைச்சா் மீது குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவருக்கு கடிதம்

கிணற்றில் குளிக்க முயன்ற மாணவா் மரணம்

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT