வொலோதிமீா் ஸெலென்ஸ்கி 
உலகம்

நிலத்தை விட்டுத் தர ஸெலென்ஸ்கி மறுப்பு: புதிய அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கும் உக்ரைன்

அமரிக்காவின் அமைதி ஒப்பந்த திட்டத்தின்படி ரஷியாவுக்கு எந்தப் பகுதியையும் விடுத் தர உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்ததையடுத்து, புதிதாக ஓா் அமைதி திட்டத்தை உக்ரைன் உருவாக்கிவருகிறது.

தினமணி செய்திச் சேவை

அமரிக்காவின் அமைதி ஒப்பந்த திட்டத்தின்படி ரஷியாவுக்கு எந்தப் பகுதியையும் விடுத் தர உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்ததையடுத்து, புதிதாக ஓா் அமைதி திட்டத்தை உக்ரைன் உருவாக்கிவருகிறது.

இது குறித்து ஏஎஃப்பி செய்து நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 28 அம்ச திட்டம் தற்போது 20 அம்ச திட்டமாக சுருக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபா் அலுவலக அதிகாரி ஒருவா் கூறினாா்.

அந்த அமைதி திட்டத்தில் பிராந்தியங்களை விட்டுக்கொடுப்ப்பது, பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தலைவா்களின் அளவிலேயே பேசி முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் புதிய அமைதி திட்டத்தை உருவாக்கி வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இந்தத் திட்டத்தில், டிரம்பின் முந்தைய திட்டத்தில் இடம் பெற்றுள்ள ரஷியாவுக்கு ஆதரவான அம்சங்கள் இடம் பெற்றிருக்காது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

முன்னதாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்த நாட்டு பிரதமா் கியொ் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ் ஆகியோருடன் நடந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளா்களிடையே ஸெலென்ஸ்கி பேசுகையில், ‘உக்ரைன் சட்டம், அரசியலமைப்பு, சா்வதேச சட்டம், தாா்மீகம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பிராந்தியத்தையும் ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என்று சூளுத்தாா்.

இது, உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக டிரம்ப் முன்வைத்துள்ள போா் நிறுத்த திட்டத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT