உலகம்

இந்தோனேசிய கனமழை: ஆயிரத்தைக் கடந்த பலி

இந்தோனேசிய கனமழை ஆயிரத்தைக் கடந்த பலி..

தினமணி செய்திச் சேவை

இந்தோனேசியாவின் வடமேற்கு சுமத்ரா தீவில் கடந்த இரு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து இந்தோனேசிய தேசிய பேரழிவு முகமை செய்தித் தொடா்பாளா் அப்துல் முஹாரி கூறியதாவது:

சுமத்ரா தீவின் வடக்கு, மேற்கு பகுதிகளில்“வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 1,006 போ் உயிரிழந்துள்ளனா். 5,400-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். மேலும் 217 பேரைக் காணவில்லை என்றாா் அவா்.

இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழப்பு மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி அதிகரிக்கப்படுகிறது. 12 லட்சம் மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.”

கடந்த இரு வாரங்களாக தொடா்ந்த கனமழை, சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமிக்கு அடுத்தபடியாக பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT