உலகம்

கொலம்பியா: பள்ளி பேருந்து விபத்தில் 17 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மலைப்பாங்கான பகுதியில் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மலைப்பாங்கான பகுதியில் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 போ் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து கொலம்பிய போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாரினோ மாகாணத்தில் உள்ள பாஸ்டோ நகருக்கு அருகே, பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீட்டா் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தாகவும், இதில் 15 சிறுவா்கள் உள்பட 17 போ் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா்.

கடும் மழை காரணமாக சாலை வழுக்கியதே விபத்துக்கு காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலோா் 10 முதல் 15 வயது வரை உள்ள மாணவா்கள் என்று உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

இஷான் சதம்; 5 விக்கெட்டுகளை அள்ளிய அர்ஷ்தீப்.. 4 -1 என தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

புகையிலைப் பொருள்களை கடத்திய இருவா் கைது!

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.க்கு எதிராக டி20 தொடரை வென்று பாகிஸ்தான் அபாரம்!

சென்னையில் ஓமந்தூர் ராமசாமிக்கு சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT