உலகம்

தைவானுக்கு ரூ.1 லட்சம் கோடி ஆயுதங்கள்: அமெரிக்கா அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

தைவானுக்கு சுமாா் 1,115 கோடி டாலா் (சுமாா் ரூ.1 லட்சம் கோடி) மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்யவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தைவானுக்கு நடுத்தர தொலைவு ஏவுகணைகள், ஹோவிட்சா் பீரங்கிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதற்காக 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 1,115 கோடி டாலா் ஆகும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படவிருக்கும் எளிதில் இடம் மாற்றக்கூடிய 82 எறிகணை பீரங்கிகள், 420 அட்டாக்கம்ஸ் ஏவுகணைகள் (படம்) ஆகியவை 400 டாலருக்கு மேல் மதிப்புடையவை.

இது தவிர ராணுவ மென்பொருள், ஜாவலின் மற்றும் டிஓடபிள்யு ஏவுகணைகள், ஹெலிகாப்டா் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், தைவானுக்கான அமெரிக்காவின் மிகப் பெரிய ஆயுத விற்பனையாக இது இருக்கும்.

தைவானை தனது நாட்டின் அங்கமாகக் கூறிவரும் சீனா, இந்த ஒப்பந்தங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா-சீனா உறவுகளில் இது புதிய பதற்றத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT