பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் 3,000-க்கும் அதிகமான ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான் அரசுகள் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து நேற்று (டிச. 23) ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட சுமார் 693 குடும்பங்களைச் சேர்ந்த 3,610 ஆப்கன் மக்கள் ஆப்கானிஸ்தான் திரும்பியுள்ளதாக, தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் முல்லா ஹம்துல்லா ஃபித்ராத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட ஆப்கன் மக்கள் அனைவரும் டோர்காம், இஸ்லாம் காலா, புல்-இ-அப்ரேஷாம், ஸ்பின் போல்டாக் மற்றும் பஹ்ராம்சா ஆகிய எல்லைகள் வழியாக ஆப்கானிஸ்தான் வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதனால், பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள ஆப்கன் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.
இத்துடன், பல ஆண்டுகளாக இயங்கி வந்த சில முக்கிய ஆப்கன் அகதிகள் முகாம்களை மூடுவதற்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துருக்கியில் விமான விபத்து! லிபியாவின் ராணுவத் தலைமைத் தளபதி உள்பட 8 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.