ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதின் மீது 91 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இருப்பினும், ட்ரோன்களை நடுவானிலேயே அழித்து, தாக்குதல் முயற்சியைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ சேதமோ ஏறபடவில்லை என்றும் கூறினர்.
இந்த நிலையில், புதின் வீட்டின் மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி குறித்து தகவல் அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், புதினை தொடர்புகொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, புதின் வீட்டின் மீது தாக்குதல் ஏதும் நடத்தவில்லை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.