முகப்பு
உலகம்

மீண்டும் பிளாஸ்டிக்: ‘பேப்பர் ஸ்ட்ரா’ வேலைக்காகாது! -டிரம்ப் அதிரடி!

அமெரிக்க அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தலாம்!

Updated On : 13 பிப்ரவரி, 2025 at 9:57 AM
பகிர்:

அமெரிக்காவில் பேப்பர் ஸ்ட்ராக்களுக்குப் பதிலாக மீண்டும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்த அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பட்டை ஊக்குவிக்க முடிவெடுத்துள்ள அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும் பிற பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடையும் கட்டுப்பாடும் விதித்திருந்த நிலையில், இதற்கு நேர்மாறான உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசுகையில், “பேப்பர் ஸ்ட்ராக்களெல்லாம் வேலைக்காகாது! அவை உடைந்து போய் விடுவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உண்டாகிறது” என்று தான் அனுபவித்த அசௌகரியங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். pஉதிய உத்தரவின்படி, இனிமேல் அமெரிக்க அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தலாம்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்திட்டிருப்பதைத் தொடர்ந்து, பேப்பர் ஸ்ட்ராக்களை கொள்முதல் செய்ய வேண்டாமென அரசு நிர்வாகம் தரப்பில் பிற துறைகளுக்கும் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் ஆண்டுதோறும் 232 மில்லியன் டன் கரியமில வாயுவை வெளிப்படுத்துகின்றன. இது, நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் 116 மின் நிலையங்களிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிப்படும் கரியமில வாயு அளவுக்குச் சமமாகும். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில், பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்பை அறிந்துகொள்ளலாம்.

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தால் சுற்றுச்சூழல் மீது பிளாஸ்டிக் ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக மீன்கள், அதிலும் குறிப்பாக, சுறாக்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என்றும் அரிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றதையும் நிராகரித்துள்ளார் டிரம்ப்.

டிரம்ப்பின் இந்த உத்தரவு உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் சுற்றுச்சுழல் ஆர்வலர்களிடையே கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது மேற்கண்ட பிளாஸ்டிக் பயன்பாடு.

முழு கட்டுரையைப் படிக்க →