பொலிவியாவில் தொடர் கனமழை, வெள்ளம்! 24 பேர் பலி!
பொலிவியா நாட்டில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிவியா நாட்டில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர் மழையால் 8 மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் முழுக்க மழையின் அளவு குறைய வாய்ப்பில்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க பொலிவியா அரசு அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
பிப்ரவரி 22ஆம் தேதி வரை பொலிவியாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ஜுவான் கார்லோஸ், திபுவானி, வடக்கு லா பாஸ், உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. 8 - 9 மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.