சீனாவில் பரவி வரும் காய்ச்சல் 
உலகம்

வெடிக்கிறதா அடுத்த பேரிடர்? சீனாவில் வேகமாகப் பரவும் மெடாநியூமோ வைரஸ்!

சீனாவில் வேகமாகப் பரவும் மெடாநியூமோ வைரஸ் பற்றி..

DIN

சீனத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்எம்பிவி அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்எம்பிவி எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பே இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

ஆனால், இதுவரை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையாலோ அல்லது உலக சுகாதார அமைப்பாலோ அறிவிக்கப்படவில்லை.

பொதுவாகவே குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிவது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது என்ன ஹியூமன் மெடாநியூமோவைரஸ்?

இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ 2001ஆம் ஆண்டு. இது பாதித்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூச்சு விடுவதில் பாதிப்பு ஏற்படும். இதன் அறிகுறிகளாக சாதாரண சளி மற்றும் காய்ச்சல்கள் இருக்கும்.

யாருக்கெல்லாம் தொற்றும்?

இந்த வைரஸ் எல்லாரையுமே பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைத் தாக்கினால் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதுபோல முதியவர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும், அது இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள், ஏற்கனவே ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு ஆபத்தானது.

அறிகுறிகள் என்னென்ன?

காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல்

தொண்டை வலி

மூச்சு விடுவதில் சிரமம்,

எப்படி பரவும்?

கரோனா போலவே இருமல், தும்மல் மூலம் பரவலாம். அவர்கள் மூக்கு, வாயைத் தொட்டுவிட்டு வேறு எங்கேணும் அவர்களது கையை வைத்து, அந்த இடத்தை மற்றவர் தொட்டால் வைரஸ் பரவலாம்.

பாதித்தால் என்ன செய்ய வேண்டும்?

தண்ணீர் அதிகம் குடித்து ஓய்வாக இருப்பது, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?

தாணே: புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம்புரண்டு விபத்து- 16 பேர் பலி

ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!

SCROLL FOR NEXT