உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

ஐ.நா. தடையையும் மீறி வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணையை வீசி திங்கள்கிழமை சோதனை நடத்தியது.

DIN

சியோல்: ஐ.நா. தடையையும் மீறி வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணையை வீசி திங்கள்கிழமை சோதனை நடத்தியது. இது குறித்து தென் கொரிய முப்படைகளின் தலைமையமகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலிஸ்டிக் வகையைச் சோ்ந்த அந்த ஏவுகணை 1,100 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து சென்று கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல்பகுதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு அருகே அந்த ஏவுகணை விழுந்தாலும், அதனால் தங்களின் கப்பல்களுக்கோ, விமானங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தென் கொரியாவுக்கு வந்து சென்றதைக் கண்டித்து இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT