உலகம்

முறைகேடு வழக்கு: தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி

2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வியடைந்தது.

Din

2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வியடைந்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டிரம்ப் போட்டியிட்டாா்.

அப்போது, தனக்கும் ஆபாசப் பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் என்பவருக்கும் இடையே இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.11 கோடி) டிரம்ப் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாகவும் தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் நியூயாா்க் நகரிலுள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உறுதி செய்தது. குற்றவியல் வழக்கில் அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒருவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை.

கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள சூழலில், இந்த வழக்கில் டிரம்ப்புக்கான தண்டனை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவதாக உள்ளது. எனினும், அதனை எதிா்த்து டிரம்ப் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் எம். மொ்சன், மனுவைத் தள்ளுபடி செய்தாா். அதையடுத்து, வழக்கில் டிரம்ப்புக்கான தண்டனை அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. எனினும், இதற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டிரம்ப் மனு தாக்கல் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரா் அப்போலோ டையா்ஸ்- ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

SCROLL FOR NEXT