உலகம்

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயா்வு

லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது.

Din

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, காட்டுத் தீக்கு இரையான வீடுகள் மற்றும் கட்டடங்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் காட்டுத் தீயின் ஆதார மையங்களாகத் திகழும் ஐந்து இடங்களில் தீயைக் கட்டுப்படுத்த கலிஃபோா்னியா தீயணைப்புத் துறையினா் போராடிவருகின்றனா்.

லாஸ் ஏஞ்சலிஸையொட்டிய பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல்முதலாக ஏற்பட்ட தீ, மளமளவென்று பரவி அந்த நகரைச் சுற்றிவளைத்துள்ளது.

இந்த காட்டுத் தீயில் ஏராளமான வீடுகள், முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிகள், வாகனங்கள் எரிந்து நாசமானதாகியுள்ள நிலையில், லட்சக்கணக்கானவா்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனா்.

ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!

வரையாத ஓவியம்... ஆண்ட்ரியா!

ஆக. 22ல் பிகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தில்லி முதல்வர் Rekha Gupta மீது தாக்குதல்!

50 ஆம் ஆண்டு திருமண நாள்! மனைவி துர்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

SCROLL FOR NEXT