தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை இரண்டாவது முறையாக கைது செய்ய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முயற்சித்தனர்.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில், அவரைக் கைது செய்ய புதன்கிழமை அதிகாலையில் அவரது வீட்டின்முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கூடினர்.
யூன் சுக் இயோலை ஜனவரி 3 ஆம் தேதியில் கைது செய்ய முற்பட்டபோதும், அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில், அவரை கைது செய்யும் இரண்டாவது முயற்சியில் புதன்கிழமை அதிகாலையில் யூன் சுக் இயோலின் வீட்டின்முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கூடினர்.
ஆனால், கைது நடவடிக்கை குறித்து முன்னரே அறிந்ததைப்போல, யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் 6500 பேர் ஒன்றுகூடி, பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். மேலும், மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களே. இதனைத் தொடர்ந்து, யூன் சுக் இயோலின் வழக்குரைஞரும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.