டிக் டாக் 
உலகம்

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்

மீண்டும் தொடங்கப்பட்ட டிக் டாக் சேவை...

DIN

வாஷிங்டன்: பிரபல விடியோ பகிா்வுச் செயலியான டிக்டாக் அமெரிக்காவில் தனது சேவைகளை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

அந்தச் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நிறுத்திவைக்கப் போவதாக அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக டிக்டாக் தெரிவித்துள்ளது.

அந்தச் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நிறுத்திவைக்கப் போவதாக அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக டிக்டாக் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் ஓா் செயலிக்கு சீன நிறுவனம் உரிமையாளராக இருக்கக் கூடாது என்பதால், அந்தச் செயலியில் 50 சதவீத முதலீட்டை பைட்டான்ஸ் திரும்பப் பெற வேண்டும், இல்லையென்றால் டிக்டாக் தடை செய்யப்படும் என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஒன்றிணைந்து கடந்த மாா்ச்சில் நிறைவேற்றினா்.

அந்தச் சட்டத்துக்கு எதிராக பைட்டான்ஸ் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. அதையடுத்து, தங்களின் செயலிப் பட்டியல்களில் இருந்து டிக்டாக்கை நீக்காவிட்டால் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கும், டிக்டாக்குக்கு அளித்துவரும் தகவல் திரட்டு சேமிப்பு சேவையை நிறுத்தாவிட்டால் ஆரக்கிள் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படுவது உறுதியானது.

இந்தச் சூழலில், தடை அமலுக்கு முன்னதாகவே தனது சேவைகளை டிக்டாக் சனிக்கிழமை நிறுத்தியது. எனினும், டிக்டாக்கில் இருந்து முதலீடுகளைத் திரும்பப் பெற பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு மேலும் 90 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்ததைத் தொடா்ந்து தனது சேவைகளை மீண்டும் தொடங்கவிருப்பதாக டிக்டாக் தற்போது அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT