டொனால்டு டிரம்ப்  AP
உலகம்

விமானப் பாதையில் ஹெலிகாப்டர் நீண்ட நேரம் சென்றது ஏன்? டிரம்ப் கேள்வி

அமெரிக்க விமான விபத்து குறித்து டிரம்ப் அடுக்கடுக்கான கேள்வி...

DIN

விமானத்தின் பாதையில் ஹெலிகாப்டர் நீண்ட நேரம் சென்றது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்க முற்பட்டபோது ராணுவத்தின் பயிற்சி ஹெலிகாப்டர் மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.

பயணிகள் விமானத்தில் 64 பேர் பயணித்த நிலையில், விமானம் வெடித்து போடோமாக் நதியில் விழுந்துள்ளது. இதுவரை 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பில் உள்ள வான் மண்டலமான வெள்ளை மாளிகைக்கு மிக அருகில் இந்த விபத்து நடந்துள்ளதால் அமெரிக்காவில் பதற்றம் நிலவுகிறது.

இந்த விபத்து குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

”பயணிகள் விமானமானது கச்சிதமாக அதன் பாதையில் விமான நிலையத்தை நோக்கி பயணித்தது. ஹெலிகாப்டர் விமானத்துக்கு நேர் பாதையில் நீண்ட நேரமாக சென்றுகொண்டிருந்தது.

அடர் இரவும் கிடையாது, வான் பாதை தெளிவாகதான் தெரிந்தது, விமானத்தின் விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தது. ஆனால், ஹெலிகாப்டர் மேல் நோக்கியோ, கீழ் நோக்கியோ வேறு பாதையில் செல்லாமல் நேராகவே சென்றது ஏன்?

விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஹெலிகாப்டரை தொடர்பு கொண்டவர்கள், விமானம் தெரிகிறதா எனக் கேட்காமல் என்ன செய்ய வேண்டும் என்று ஹெலிகாப்டருக்கு ஏன் கட்டளையிடவில்லை?.

இது மிகவும் மோசமான சூழல், தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது நல்லதுக்கு அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT