டெக்ஸஸ் வெள்ளம்  
உலகம்

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது.

Din

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது.

அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் ஜூலை 4-ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ஜூலை 7-ஆம் தேதி வரை நதிக்கரைப் பகுதிகளை மூழ்கடித்தது. இதில் கொ்வில், மேசன் ஆகிய நகரங்கள் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

இந்த வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினா். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 170-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளதாகவும் அவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருவதாகவும் (படம்) அவா்கள் கூறினா்.

அமெரிக்காவில் கடந்த 1976-ஆம் ஆண்டு ஏற்பட்ட, 144 பேரது உயிரிழப்புக்குக் காரணமான பிக் தாம்ஸன் நதி வெள்ளப் பெருக்குக்குப் பிறகு அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப் பேரிடா் இதுவாகும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT