முகப்பு
உலகம்

இலங்கையில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி!

இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி இடையிலான உரையாடல் குறித்து...

Updated On : 23 ஜூலை 2025, 4:12 pm IST
இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரியுடன், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சையத் ஆமிர் ரெஸா - Ministry of Defence, Sri lanka
பகிர்:

இலங்கை பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமெர் ரெஸா சந்தித்துப் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமிர் ரெஸா, அரசு முறைப் பயணமாக, இலங்கைக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெனரல் சையது ஆமிர் ரெஸா, நேற்று (ஜூலை 22) இலங்கையின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, நேரில் சந்தித்து உரையாடினார்.

Advertisement

Advertisement

அப்போது, பாதுகாப்புத் துறையின் திறன்மேம்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இயற்கை பேரிடர் காலங்களில் இருதரப்புக்கும் இடையிலான தயார்நிலைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இருநாட்டு அதிகாரிகளும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பானது கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை அதிகாரிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை! பரிசோதனையில் வெற்றி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments