டிரம்ப் பதிவிட்டுள்ள சித்திரிப்பு படம் Truth Social
உலகம்

ஒபாமாவை விடாமல் துரத்தும் டிரம்ப்! ஏஐ சித்திரிப்பால் மீண்டுமொரு சர்ச்சை!

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை டொனால்ட் டிரம்ப் துரத்துவதுபோன்ற சித்திரிப்பு படத்தால் சர்ச்சை

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை துரத்துவதுபோன்ற சித்திரிப்பு படத்தை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்வது போன்ற ஏஐ விடியோவை கடந்த தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தினார். சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது என்றுகூறி, பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், காரில் செல்லும் ஒபாமாவை டிரம்ப்பும் காவல்துறையும் பின்தொடர்ந்து துரத்துவதுபோன்ற சித்திரிக்கப்பட்ட புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

டிரம்ப்பின் முந்தைய பதவியேற்பின்போது, அதனைத் தடுக்க ஒபாமா முயன்றதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க தேசிய புலனாய்வும் தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து ஒபாமா கூறுகையில், அதிபர் பதவி மற்றும் வெள்ளை மாளிகையின் மீதான மரியாதை காரணமாகவே, வெள்ளை மாளிகையிலிருந்து வரும் முட்டாள்தனமான மற்றும் தவறான தகவல்களை கண்டுகொள்வதில்லை.

ஆனால், தற்போதைய குற்றச்சாட்டுகள் அபத்தமானவை; இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அவர் மீதான பாலியல் வழக்கை திசைதிருப்பும் முயற்சிதான் இது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: 6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

Trump’s latest meme jibe features Obama in OJ Simpson white Ford Bronco police chase

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகா் சதுா்த்தி: பாஜக தேசிய தலைவா் நட்டா

SCROLL FOR NEXT