dot com
உலகம்

டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவு நீக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.

DIN

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.

அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதாவால், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் டெஸ்லா நிறுவனரும் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, பொதுவெளியிலேயே (சமூக ஊடகங்களில்) சண்டையிட்டனர்.

மேலும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டஜெஃப்ரி எப்ஸ்டைன் தொடர்பாக வெளியிடப்படாத ஆவணங்களில் டிரம்ப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக எலான் மஸ்க் நேரடியாக குற்றஞ்சாட்டினார்.

எப்ஸ்டைன் ஆவணங்களில் டொனால்ட் டிரம்ப் பெயர் இருந்தது. அதனால்தான் அது பொது வெளியில் வெளியிடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார் எலான் மஸ்க். அவரின் இந்தக் குற்றச்சாட்டை மிக துரதிருஷ்டவசமான சம்பவம் என்று வெள்ளை மாளிகையும் விமர்சித்தது.

இந்த நிலையில், எப்ஸ்டைன் தொடர்பான ஆவணங்களில் டிரம்ப் பெயர் இருப்பதாக, தான் பதிவிட்ட பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT