ஈரான் தலைமை மதகுரு கமேனி 
உலகம்

கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதா?

ஈரான் தலைமை மதகுரு கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்ட நிலையில், அதை அமெரிக்க அதிபா் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Din

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்ட நிலையில், அதை அமெரிக்க அதிபா் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அயதுல்லாவை கொல்வதற்கு நம்பகமான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசிடம் இஸ்ரேல் அண்மையில் தெரிவித்தது.

அந்தத் திட்டம் குறித்து விவரிக்கப்பட்ட நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க அதிபா் டிரம்ப் மறுத்துவிட்டாா். இதை இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபா் மாளிகை தெளிவாக தெரிவித்தது.

இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடைந்து பெரிதாக வெடிக்கக் கூடாது என்று டிரம்ப் அரசு கருதுகிறது. இந்நிலையில், அயதுல்லாவை கொல்லும் திட்டம் இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு மேலும் தீ மூட்டி, மத்திய கிழக்கு பிராந்தியத்தை நிலைகுலைய வைக்கலாம் என்று டிரம்ப் அரசு கருதியதால், அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அமெரிக்க செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலளிக்க நெதன்யாகு மறுத்துவிட்டாா்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT