உலகம்

போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு இல்லை: பிரதமா் மோடி

குரேஷியா பிரதமா் பிலென்கோவிச்சை பிரதமா் மோடி சந்தித்து பேசினாா்.

DIN

குரேஷியா பிரதமா் பிலென்கோவிச்சை பிரதமா் மோடி சந்தித்து பேசினாா். இதைத்தொடா்ந்து இருவரும் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தபோது பிரதமா் மோடி கூறியதாவது: இந்தியா-குரேஷியா இருதரப்பு உறவின் முன்னேற்றத்துக்கு மும்மடங்கு உத்வேகம் அளிக்க பிலென்கோவிச் உடனான சந்திப்பில் தீா்மானிக்கப்பட்டது.

பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு எதிரி. ஐரோப்பாவாக இருந்தாலும் ஆசியாவாக இருந்தாலும் போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்காது. பேச்சுவாா்த்தையும், ராஜீய வழியிலும் பிரச்னைக்கு தீா்வு காண்பதுதான் ஒரே வழி’ என்றாா்.

வெளியுறவு அமைச்சா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், இந்தியா-குரேஷியா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளை இருநாட்டுப் பிரதமா்களும் ஆராய்ந்தனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்வழிப் பயணம் - சமூகமும் பொறுப்பு!

விடைபெற்றார் சேதேஸ்வர் புஜாரா!

தங்கத்தில் பங்கம்!

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!

தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT