கோப்புப் படம் 
உலகம்

நைஜீரியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல்! 10 பேர் பலி!

நைஜீரியாவிலுள்ள உணவகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டதைப் பற்றி...

DIN

நைஜீரியாவின் வடக்கிழக்கு மாநிலத்திலுள்ள உணவகத்தில் தற்கொலைப் படை குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொர்னோ மாநிலத்தின் கொண்டூங்கா பகுதியில், நேற்று (ஜூன் 20) மாலை வெடிகுண்டு கட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் அதை வெடிக்கச் செய்ததில், 10 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதிகளில், பெரும்பாலான தாக்குதல்களை போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நடத்தி வருகின்றன.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நைஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய கிளர்ச்சியாளர் அமைப்பான போகோ ஹராம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் பல முக்கிய நகரங்களை அச்சுறுத்தி வருகின்றது.

இதனால், அந்நாட்டில் சுமார் 35,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 20 லட்சத்துக்கும் மேலான மக்கள் இடமாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மைக்கு 1,800 பேர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருப்புப் பாதை பராமரிப்புப் பணி: வைகை, வந்தே பாரத் ரயில்கள் தாமதம்

அரசியல் மாற்றம் வர வேண்டும் எனக் கூறி கைப்பேசி கோபுரத்தின் மீது ஏறிய நபரால் பரபரப்பு

சத்தியமங்கலத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவம்

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாளைய மின் தடை: பெருந்துறை சிப்காட்

SCROLL FOR NEXT